இந்தியா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்த ஆல்டைம் சிறந்த டி20 லெவனை தேர்வு செய்துள்ளார் பாக்., முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபத்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகள் இந்தியா - பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். ஆனால் கடந்த சுமார் பத்தாண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்கள் நடக்கவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களின் கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபத், இந்தியா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்த ஆல்டைம் டி20 லெவனை தேர்வு செய்துள்ளார்.
முதலில் கேப்டனைத்தான் தேர்வு செய்தார் அராஃபத். கேப்டனாக தோனியை தேர்வு செய்த யாசிர் அராஃபத், தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் 3ம் வரிசையில் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் முகமது ஹஃபீஸையும், 4ம் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்தார்.

5ம் வரிசையில் உமர் அக்மலையும், ஆல்ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடியையும் ஆல்டைம் சிறந்த டி20 அணியில் எடுத்த யாசிர் அராஃபத், ஃபாஸ்ட் பவுலர்களாக சொஹைல் தன்வீர், உமர் குல், பும்ரா ஆகிய மூவரையும், ஸ்பின்னராக பாகிஸ்தான் ஸ்பின் ஜாம்பவான் சயீத் அஜ்மலையும் தேர்வு செய்தார்.
யாசிர் அராஃபத் தேர்வு செய்த ஆல்டைம் இந்தியா - பாகிஸ்தான் டி20 லெவன்:
ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஹஃபீஸ், யுவராஜ் சிங், உமர் அக்மல், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷாஹித் அஃப்ரிடி, சொஹைல் தன்வீர், உமர் குல், பும்ரா, சயீத் அஜ்மல்.
