Asianet News TamilAsianet News Tamil

WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி பலப்பரீட்சை.. மும்பை அணிக்கு முக்கியமான போட்டி..! டாஸ் ரிப்போர்ட்

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

wpl 2023 mumbai indians win toss opt to field against rcb
Author
First Published Mar 21, 2023, 3:34 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

இன்று மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் ஜெயிப்பது முக்கியம். ஏனெனில் மும்பை இந்தியன்ஸை போலவே 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி கடைசி போட்டியில் வலுவான யுபி வாரியர்ஸை எதிர்கொள்வதால் அந்த போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கக்கூடும். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் ஜெயித்தால் நேரடியாக ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை தகர்க்கணுமா? இதை மட்டும் செய்ங்க! விராட் கோலிக்கு அக்தர் கொடுக்கும் ஐடியா

அதனால் இந்த போட்டி மும்பை இந்தியன்ஸுக்குத்தான் முக்கியமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத்  கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

அந்த 2 பசங்க மட்டும் தான் என்னைப்போல் அதிரடியா ஆடுறானுங்க..! வேற யாருமே இல்ல.. சேவாக் அதிரடி

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா ஷோபனா, பிரீத்தி போஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios