WPL 2023: ரூ.50 லட்சம் என்ற அதிகபட்ச அடிப்படை விலையை கொண்ட வீராங்கனைகள்..!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்படும் நிலையில், ரூ.50 லட்சம் என்ற அதிகபட்ச அடிப்படை விலை பட்டியலில் உள்ள வீராங்கனைகளை பார்ப்போம்.

ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.
வரும் மார்ச் 4ம் தேதி முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடக்கவுள்ளது. முதல் சீசனுக்கான ஏலம் வரும் 13ம் தேதி மும்பையில் நடக்கிறது. மகளிர் பிரீமியர் லீக்கிற்கான ஏலத்தில் 406 வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர். இதில் 246 பேர் இந்திய வீராங்கனைகள், 160 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள்.
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் அதிரடி தேர்வு
வரும் 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கப்படுகிறது. 406 வீராங்கனைகளும் ஒரே நாளில் ஏலம் விடப்படுகின்றனர். இதில், ரூ.50 லட்சம் என்ற அதிகபட்ச அடிப்படை விலை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளை பார்ப்போம்.
ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலையை கொண்ட வீராங்கனைகள்:
சோஃபி டிவைன், சோபி எக்செலெஸ்டோன், ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, அலைஸா ஹீலி, ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, நட் ஸ்கைவர்-பிரண்ட், மெக் லானிங், ஷஃபாலி வெர்மா, பூஜா வஸ்ட்ராகர், டீண்ட்ரா டாட்டின், டயானா வியாட், ஜெஸ் ஜோனாசென், கேத்தரின் ஸ்கைவர்-பிரண்ட், சினாலோ ஜாஃப்டா, மேக்னா சிங், லாரின் ஃபிரி, டார்ஸி பிரௌன்.