Asianet News TamilAsianet News Tamil

மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஃபைனலுக்கு தகுதி

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

womens t20 world cup 2023 south africa beat england in semi final and qualifies to final
Author
First Published Feb 24, 2023, 10:14 PM IST

மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதி போட்டி இன்று நடந்தது. தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான இந்த அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மாரிஸான் கேப், சுன் லூஸ் (கேப்டன்), க்ளோ ட்ரயான், நாடின் டி கிளெர்க், அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காகா, நோன்குலுலெகோ லாபா.

டான் பிராட்மேனை விட அதிக சராசரி.. டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஹாரி ப்ரூக்

இங்கிலாந்து மகளிர் அணி:

டேனியல் வியாட், சோஃபியா டன்க்லி, அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர் பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரென் பெல்.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா மற்றும் பிரிட்ஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 13.4 ஓவரில் 96 ரன்களை குவித்தனர். லாரா வோல்வார்ட் 44 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 55 பந்தில் 68 ரன்கள் அடித்து பிரிட்ஸும் ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் இறங்கிய மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சோபிக்காததால் 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியால் அடிக்க முடிந்தது.

165 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் வியாட் மற்றும் டன்க்லி இணைந்து அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வியாட் 30 பந்தில் 34 ரன்களும், சோஃபியா டன்க்லி 16 பந்தில் 28 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஸ்கிவர் பிரண்ட் 34 பந்தில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹீதர் நைட் 31 ரன்கள் அடித்தார். அவர்கள் நிலைத்து நின்று ஆடாமல் செட்டில் ஆனதும் அவுட்டாகினர். அதன்பின்னர் மற்ற வீராங்கனைகள் யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் கடுமையாக போராடியும் இங்கிலாந்து அணியால் 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

IND vs AUS:எப்பேர்ப்பட்ட பிளேயர் ராகுல்; அப்படிலாம் ஈசியா தூக்கமுடியாது! கேஎல் ராகுலுக்கு கம்பீர் ஆதரவுக்குரல்

6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஃபைனலில் ஆஸ்திரேலிய அணியை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios