Asianet News TamilAsianet News Tamil

பாட்ஷா பட பாடல் வரியை நினைவுபடுத்திய வில்லியம்சனின் ரியாக்‌ஷன்

நியூசிலாந்து அணியை தனி ஒருவனாக தனது தோள்களில் சுமந்துகொண்டு இறுதி போட்டி வரை அழைத்துவந்து, கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று அனைவரும் பாராட்டும்படியாகவும் நியூசிலாந்து கோப்பையை வெல்லாததை நினைத்து வருந்தும்படியான ரசிகர்களை சம்பாதிப்பதற்கும் வில்லியம்சன் ஒருவரே காரணம். 
 
williamson reaction after lost world cup remembers baasha movie song
Author
England, First Published Jul 15, 2019, 12:32 PM IST

பெரியளவில் பேட்டிங் சிறப்பாக இல்லாதபோதிலும் கேன் வில்லியம்சனின் சிறப்பான கேப்டன்சியாலும் அபாரமான பவுலிங்காலும் இறுதி போட்டி வரை வந்து, இறுதி போட்டியிலும் இங்கிலாந்திற்கு செம நெருக்கடி கொடுத்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணியை தனி ஒருவனாக தனது தோள்களில் சுமந்துகொண்டு இறுதி போட்டி வரை அழைத்துவந்து, கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று அனைவரும் பாராட்டும்படியாகவும் நியூசிலாந்து கோப்பையை வெல்லாததை நினைத்து வருந்தும்படியான ரசிகர்களை சம்பாதிப்பதற்கும் வில்லியம்சன் ஒருவரே காரணம். 

williamson reaction after lost world cup remembers baasha movie song

கப்டில், நிகோல்ஸ், லேதம், என எந்த வகையிலும் பேட்டிங்கில் சரியான சப்போர்ட் கிடைக்காமல் டெய்லருடன் இணைந்து தனி ஒருவனாக அழைத்து வந்தார் வில்லியம்சன். உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட 300 ரன்களை அடிக்காவிட்டாலும் கூட, அடித்த குறைந்த ஸ்கோரைக்கூட, அணியையும் பவுலர்களையும் சிறப்பாக வழிநடத்தி டிஃபெண்ட் செய்ய பக்கபலமாக இருந்தவர் வில்லியம்சன் தான். 

வில்லியம்சனின் கேப்டன்சி தான் நியூசிலாந்து அணியின் பெரிய பலமே. பொதுவாகவே வெற்றியை பெரியளவில் கொண்டாடாமல் நிதானமாக இருப்பவர் வில்லியம்சன். அதை அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தியபோதே பார்த்திருக்கக்கூடும். அதேபோலத்தான் இக்கட்டான சூழலிலும் நிதானமாகவே செயல்படுபவர் வில்லியம்சன். 

williamson reaction after lost world cup remembers baasha movie song

உலக கோப்பை இறுதி போட்டியில் கடுமையாக போராடி வெற்றிக்கு அருகில் சென்ற நியூசிலாந்து அணி சில துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கோப்பையை இழக்க நேரிட்டது. 49வது ஓவரில் ஸ்டோக்ஸின் கேட்ச்சை பிடித்த போல்ட் பவுண்டரி லைனை மிதித்தது, கடைசி ஓவரில் ஓவர் த்ரோவால் கிடைத்த 4 ரன்கள் என அனைத்துமே நியூசிலாந்துக்கு எதிராக அமைந்தது. போட்டி டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரும் டிரா ஆனதால், போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணிதான் வெற்றி என்ற ஐசிசி விதிப்படி இங்கிலாந்து கோப்பையை வென்றது. 

கடந்த உலக கோப்பை தொடரிலும் இறுதி போட்டி வரை கோப்பையை இழந்த நியூசிலாந்து, இந்த முறையும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை வெல்லுமளவிற்கு சென்று கடைசி நேரத்தில் இழந்தது. அந்த வருத்தம் நியூசிலாந்து வீரர்களிடம் ரொம்ப அதிகமாக இருந்தது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க முடியாததால் கப்டில் கண்ணீர் விட்டு அழுகவே செய்தார். நியூசிலாந்து அணியே சோகத்தில் மூழ்கியது. 

williamson reaction after lost world cup remembers baasha movie song

அவ்வளவு சோகத்திலும் போட்டிக்கு பின்னர் பேசும்போது, சிறு சிறு புன்னகையை உதிர்த்தார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். துரதிர்ஷ்டத்தால் கோப்பையை இழந்த ஒரு அணியின் கேப்டனுக்கு எவ்வளவு மனவருத்தம் இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அப்படியான சூழலிலும் அந்த வருத்தத்தை பெரிதாக காட்டாமல் புன்னகையை உதிர்த்துவிட்டுத்தான் சென்றார் வில்லியம்சன். 

williamson reaction after lost world cup remembers baasha movie song

பாட்ஷா படத்தில் ரஜினியை கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்த்ராஜ் அடிக்கும்போது, வரும் பாடலில் ஒரு வரி வரும். பச்ச ரத்தம் ஒழுகும்போதும் பச்ச குழந்தை சிரிப்ப பாருடா..... என்று ஒரு வரி வரும். கோப்பையை இழந்தபிறகான வில்லியம்சனின் ரியாக்‌ஷன், அந்த வரியைத்தான் நினைவுபடுத்தியது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios