நியூசிலாந்தில் உள்நாட்டு டி20 தொடரான சூப்பர் ஸ்மாஷ் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் காண்டெர்பரி மற்றும் வெலிங்டன் அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் ஆடிய காண்டர்பெரி அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது. 149 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெலிங்டன் அணியை 145 ரன்களுக்கு சுருட்டி 3 ரன்கள் வித்தியாசத்தில் காண்டெர்பரி அணி த்ரில் வெற்றி பெற்றது. 

காண்டெர்பரி அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் வில் வில்லியம்ஸ் மிகவும் உதவிகரமாக இருந்தார். வெறும் இரண்டே ஓவர் வீசிய வில்லியம்ஸ், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 18வது ஓவரை வீசிய வில்லியம்ஸ், அந்த ஓவரில் ஃப்ரேசர் கால்சன், லாச்சி ஜான்ஸ், ஜாமி கிப்சன் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். அந்த வீடியோ இதோ.. 

பிக்பேஷ் லீக்கில் நேற்று ஒரே நாளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி சார்பில் ரஷீத் கானும், சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஹாரிஸ் ராஃபும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பித்தக்கது.