இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் வில் ஜாக்ஸ், 25 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார். 

துபாயில் டி10 லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் சர்ரே அணியும் லன்காஷைர் அணியும் மோதிய போட்டியில் சர்ரே அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வில் ஜாக்ஸ், லன்காஷைரின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். 

முதல் பந்திலிருந்தே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். 4 ஓவர் முடிந்தபோது 16 பந்துகளில் 62 ரன்களை குவித்திருந்தார். பாரி வீசிய ஐந்தாவது ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸர் அடித்து தெறிக்கவிட்டார் வில் ஜாக்ஸ். அந்த ஓவர் முடிந்தபோது 22 பந்துகளில் 98 ரன்களை குவித்துவிட்டார். 25 பந்துகளில் சதமடித்த வில் ஜாக்ஸ், 30 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். 

வில் ஜாக்ஸின் அதிரடியால் சர்ரே அணி 10 ஓவர் முடிவில் வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. 177 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லன்காஷைர் அணியை சர்ரே அணி வெறும் 81 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது.