Asianet News TamilAsianet News Tamil

பிசிசிஐ மீடியா உரிமைக்காக போட்டி போடும் மீடியாக்கள் என்னென்ன? காரணம் என்ன?

பிசிசிஐ மீடியா உரிமைக்கான டெண்டர் இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த டெண்டரில் 5 முக்கியமான மீடியா நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What is the Reason Behind viacom18, disney star, zee, sony fight for BCCI Media Rights?
Author
First Published Jul 25, 2023, 1:33 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது இன்று செவ்வாய்க்கிழமை 25ஆம் தேதி வெளியாகிறது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக IND vs AUS ODI தொடருக்கான புதிய ஒளிபரப்பு உரிமைகளின் டெண்டர் ஆகஸ்ட் 19க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WI vs IND ODI: நிக்கோலஸ் பூரன் இல்லை: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

புதிய ஒப்பந்தமானது 5 ஆண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனமானது வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இரு தரப்பு போட்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெறும்.

ஏல செயல்முறை குறித்து ஒளிபரப்பாளர்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இது மின்-ஏலமாக இருக்க வாய்ப்புள்ளது. மின் ஏலத்தின் மூலம் ஐபிஎல் மீடியா உரிமைகளை விற்றதன் மூலம் 48,390 கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருவாய் கிடைத்துள்ளது.

WTC Standings: 2ஆவது டெஸ்ட் போட்டி டிரா - 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா, நம்பர் 1ல் பாகிஸ்தான்!

சரி, இந்த டெண்டருக்கான ஏலத்தில் போட்டி போடும் மீடியா நிறுவனங்கள் என்னென்ன என்று பார்த்தால் வழக்கம் போல் டிஸ்னி ஸ்டார் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்), வையாகாம் 18 (ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா), சோனி (சோனி 10, சோனி லைவ்) ஆகியவை அடங்கும். இந்த நிறுவங்கள் தவிர ஜீ மற்றும் ஃபேன் கோடு ஆகியவை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான போட்டியில் இந்த நிறுவனங்களுடன் இணைந்து 5 ஆண்டுகாலத்திற்கு போட்டி போடுகின்றன.

ஏற்கனவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டி ஆகியவை எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகள் ஃபேன்கோடு ஆப்பில் தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND 2nd Test: மழையால் டிரா ஆன 2ஆவது டெஸ்ட்: 1-0 என்று தொடரை கைப்பற்றிய டீம் இந்தியா!

சிறந்த போட்டியாளர்கள் யார்? ஏன்?

டிஸ்னி-ஸ்டார்:

டிஸ்னி-ஸ்டார் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார்): ஐபிஎல் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து விலகியதால், டிஸ்னி-ஸ்டாருக்கு போட்டித்தன்மையுடன் இருக்க இந்திய கிரிக்கெட் டிஜிட்டல் உரிமைகள் தேவை. HBO, டிஸ்னி+ஹாட்ஸ்டாரை விட்டு வெளியேறுவதால், இந்திய ஹோம் மேட்ச்கள் இப்போது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

Viacom 18:

Viacom ஆனது டிஜிட்டல் ரீதியில் நிறைய சலுகைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் போட்டிகளை டிவியில் குறைவாகவே கொண்டுள்ளது. இதன் மூலமாக பார்வையாளர்களை அதிகரிக்க குறைந்தபட்சம் டிவி உரிமையையாவது பெற வையாகாம் தீவிரமாக இருக்கும்.

சோனி

UEFA சாம்பியன்ஸ் லீக் மற்றும் UFC மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் உரிமைகளைத் தவிர, சோனி இந்தியாவில் தனது காலடியை இழந்துவிட்டது. டிவி மற்றும் டிஜிட்டல் தளங்கள் இரண்டையும் புதுப்பிக்க, சோனிக்கு இந்திய கிரிக்கெட் தேவை. ஆதலால் மீடியா உரிமைக்காக கடுமையாக போட்டி போடுகிறது.

ஜீ:

சோனியுடன் இணைவது இன்னும் நிலுவையில் உள்ளதால், ஜீ உரிமைகளைப் பெறுவதற்கும், பின்னர் தளங்களை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைவதற்கும் இந்திய கிரிக்கெட் மீடியா உரிமையை நம்புகிறது.

FanCode:

இனி புதிய போட்டியாளர்கள் என்று யாரும் இல்லை. ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் சில நல்ல விளையாட்டு பண்புகளுடன், FanCode சீராக வளர்ந்துள்ளது. டிஜிட்டல் உரிமைகளுக்காக அவர்கள் வலிமைமிக்க எதிரிகளான மற்றா போட்டியாளர்களை வீழ்த்தினால், தளம் கணக்கிடுவதற்கான சக்தியாக இருக்கும்.

தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு நடத்திய கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் புகைப்படம்!

பிசிசிஐ ஊடக உரிமைக்கான டெண்டரின் சிறப்பம்சங்கள்:

  1. புதிய ஒப்பந்தம் ஐபிஎல் போட்டியைப் போலவே 5 ஆண்டுகளுக்கு இருக்கும்.
  2. டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகள் இரண்டும் தனித்தனியாக இருக்கும், ஏனெனில் டிஜிட்டலில் மேல்நோக்கிய போக்கு உள்ளது.
  3. மூடிய ஏல முறைக்கு பதிலாக மின்-ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது.
  4. ஐபிஎல் மீடியா உரிமை விற்பனை மூலம் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் டிவி உரிமையும் டிஜிட்டல் உரிமையும் தனித்தனியாக இருந்தது.
  5. புதிய ஒப்பந்தத்தின் கீழ் வரும் போட்டிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் விவாதத்தில் உள்ளது.
  6. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் 100 இருதரப்பு போட்டிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
  7. புதிய சுழற்சியில், அதிக எண்ணிக்கையிலான டி20 போட்டிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகள் இருக்கும், ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களிடையில் ஆர்வம் குறைவாக உள்ளது.
  8. டிஸ்னி-ஸ்டார் கடந்த முறை 103 போட்டிகளுக்கு ரூ.6138.10 கோடி செலுத்தியது. இது ஒரு போட்டியின் மதிப்பீடாக 61 கோடி ரூபாய் ஆனது. இருப்பினும், உரிமைகள் தனித்தனியாக இருக்கும் என்பதால், பிசிசிஐ ரூ. 12,000 கோடிக்கு மேல் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us:
Download App:
  • android
  • ios