Asianet News TamilAsianet News Tamil

WI vs IND: 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

west indies win toss opt to field against india in second t20
Author
St Kitts & Nevis, First Published Aug 1, 2022, 10:52 PM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

2வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸ்&நெவிஸில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸ் போட்டு 8 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் டிரினிடாட் ஏர்போர்ட்டிலிருந்து இந்திய வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதமானதால் போட்டி தாமதமானது.

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

3 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்குகிறது. இரவு 10.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரான் ஹெட்மயர், டெவான் தாமஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios