Asianet News TamilAsianet News Tamil

#WIvsSA முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

west indies team announced for the first test against south africa
Author
West Indies, First Published Jun 9, 2021, 3:31 PM IST

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

முதல் டெஸ்ட் போட்டி நாளை(10ம் தேதி) தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 18-22ல் நடக்கிறது. இந்நிலையில், நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ரைக் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஷாய் ஹோப் மற்றும் கீரன் பவல் ஆகிய இருவரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய ஷாய் ஹோப், டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், ஓராண்டுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல 2018ம் ஆண்டுக்கு பிறகு கீரன் பவல் மீண்டும் இப்போதுதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

west indies team announced for the first test against south africa

19 வயது இளம் வீரர் ஜெய்டன் சீல்ஸ் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட்(கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட்(துணை கேப்டன்), பானர், ரோஸ்டன் சேஸ்ல், கார்ன்வால், ஜோஷுவா சில்வா, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசஃப், கைல் மேயர்ஸ், கீரன் பவல், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios