வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ளன. 

அதன்பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது வெஸ்ட் இண்டீஸுக்கு பலம் என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல. 

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டர் தலைமையிலான 13 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), க்ரைக் ப்ராத்வெயிட், டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், ஜான் காம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷேனான் காப்ரியல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கீமார் ரோச். 

இந்திய அணி: 

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), மயன்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.