வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அந்த வகையில் வலுவான இந்திய அணிக்கு எதிராக அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து, வீரர்களை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி பொல்லார்டு தலைமையில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

டி20 அணி அதிரடியான பேட்டிங் ஆர்டர், நல்ல ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ளது. டி20 அணியில் அதிரடி வீரர்கள் எவின் லூயிஸ், நிகோலஸ் பூரான், ஷிம்ரான் ஹெட்மயர், லெண்டில் சிம்மன்ஸ், ரூதர்ஃபோர்டு, ராம்தின் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பொல்லார்டு, ஜேசன் ஹோல்டர், ரூதர்ஃபோர்டு ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டர்கள். 

இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலுமே அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் இல்லை. 

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி:

பொல்லார்டு(கேப்டன்), எவின் லூயிஸ், சிம்மன்ஸ், நிகோலஸ் பூரான், ஹெட்மயர், ரூதார்ஃபோர்டு, பொல்லார்டு, ஹோல்டர், ராம்தின், பிரண்டன் கிங், ஃபேபியன் ஆலன், கீமோ பால், ஷெல்டான் கோட்ரெல், கேரி பியெர், ஹெய்டன் வால்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ். 

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:

பொல்லார்டு(கேப்டன்), சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரான், ஹெட்மயர், லூயிஸ், பிரண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், கோட்ரெல், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஹோல்டர், கீமோ பால், அல்ஸாரி ஜோசஃப், பியெர், ஹெய்டன் வால்ஷ்.