Asianet News TamilAsianet News Tamil

#WIvsAUS 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

west indies and australia teams probable playing eleven for second odi
Author
West Indies, First Published Jul 21, 2021, 10:14 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை 4-1 என படுமோசமாக தோற்றது. இதையடுத்து நடந்துவரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பவுலிங்கால் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அதே நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் 2வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால், அதேவேளையில் முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் முகமது, நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஹைடன் வால்ஷ், ஷெல்டான் காட்ரெல், அல்ஸாரி ஜோசஃப், அகெல் ஹுசைன்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

பென் மெக்டெர்மோட், ஜோஷ் ஃபிலிப், மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி(கேப்டன், விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், வெஸ் அகார், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios