இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி வென்றது. இதையடுத்து அதிகாரப்பூர்வற்ற டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டியிலும் இந்தியா ஏ அணிதான் வென்றது. இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணியில் பிரியங்க பன்சால் மற்றும் ஷிவம் துபே மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் இந்தியா ஏ அணி 190 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 12 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இரண்டம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் அடித்துள்ளது. சந்தீப் வாரியர் இரண்டாவது இன்னிங்ஸை மிரட்டலான பவுலிங்குடன் தொடங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் திணறிவருகிறது.