Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் சூப்பர் லீக்கை படுத்தி எடுக்கும் கொரோனா!வாசிம் அக்ரம்,வஹாப் ரியாஸ்,ஹைதர் அலி ஆகியோருக்கு பாசிட்டிவ்

பாகிஸ்தான் சூப்பர் லிக் தொடர் வரும் 27ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். 
 

Wasim Akram Wahab Riaz and Haider Ali tested covid positive ahead of PSL 2022
Author
Pakistan, First Published Jan 25, 2022, 6:26 PM IST

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் வரும் 27ம் தேதி(வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடந்துவருகின்றனர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாளை மறுநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்குபெறும் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியாகிவருகிறது.

4 நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆடும் 3 விக்கெட் கீப்பர்கள் மற்றும் 5 பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து 2 நாளைக்கு முன் பெஷாவல் ஸால்மி அணியை சேர்ந்த காம்ரான் அக்மல் மற்றும் அர்ஷத் இக்பால் ஆகிய இருவருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில், இப்போது கராச்சி கிங்ஸ் அணியின் பிரசிடெண்ட் வாசிம் அக்ரம் மற்றும் பெஷாவர் ஸால்மி அணி வீரர்களான வஹாப் ரியாஸ் மற்றும் ஹைதர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை திட்டமிட்டபடி வரும் 27ம் தேதி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios