Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணி 2007க்குப் பின் டி20 உலக கோப்பையை வெல்ல முடியாததற்கு ஐபிஎல் தான் காரணம்..! வாசிம் அக்ரம் கருத்து

ஐபிஎல் தொடங்கப்பட்டதற்கு பின் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்பதை பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

wasim akram points out india did not win t20 world cup since ipl started in 2008
Author
First Published Nov 11, 2022, 4:56 PM IST

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது ஆஸ்திரேலியா தான் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே வராமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.

T20 WC: கம்பீர், ஹர்பஜன் எவ்வளவோ சொன்னாங்க.. கொஞ்சம் கூட கேட்காமல் தோற்றுப்போய் தொடரைவிட்டு வெளியேறிய இந்தியா

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்திய அணி தோற்றது கூட பிரச்னையில்லை. ஆனால் தோற்ற விதம் படுமோசமானது; மேலும் வருத்தமளிக்கக்கூடியது.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டைக்கூட இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லரும்(80), அலெக்ஸ் ஹேல்ஸும்(86) இணைந்து 16 ஓவரில் இலக்கை அடித்து இந்தியாவை எளிதாக வீழ்த்தினர். அதனால் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது.

டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக பும்ரா, ஜடேஜா ஆடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. டி20 உலக கோப்பை தொடங்கிய 2007ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் அடுத்த கோப்பைக்கான காத்திருப்பு 15 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், இன்னும் தொடர்கிறது.

டி20 உலக கோப்பையில் முதலிடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்த ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி

ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்திய கிரிக்கெட்டுக்கு அது மிகப்பெரும் பலமாக அமையப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐபிஎல் தொடங்குவதற்கு முன் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் டி20 உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதை வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம், ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அது இந்தியாவிற்கு பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் தொடங்கும் முன் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. 2011ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்றது. ஆனால் டி20 உலக கோப்பையை வென்றதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிஎல்லில் இரண்டரை மாதங்கள் முழுமையாக ஆடும் இந்திய முன்னணி வீரர்கள் சிலர், குறிப்பாக பவுலர்கள் ஐபிஎல்லில் காயமடைய நேர்வதால், அவர்களால் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான பெரிய தொடர்களில் இந்திய அணிக்காக ஆடமுடியாமல் போகிறது. அது இந்திய அணிக்கும் பெரும் பின்னடைவாகவும் அமைகிறது. பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்கள் டி20 உலக கோப்பையில் ஆடாதது பெரும் பின்னடைவாக அமைகிறது.

T20 WC: அரையிறுதியில் படுதோல்வி.. உடைந்து அழுத ரோஹித்: தட்டிக்கொடுத்து தேற்றிய ராகுல் டிராவிட்! வைரல் வீடியோ

அதுமட்டுமல்லாது ஒரு அணியை கட்டமைத்து எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கையில், ஐபிஎல்லில் திடீரென ஒரு சில இன்னிங்ஸ்களை சிறப்பாக ஆடும் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆட அவர்களை விட சிறந்த வீரர்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல்லில் நன்றாக ஆடியதால் அவர்கள் இந்திய அணியில் எடுக்கப்படுகிறார்கள். ஐபிஎல்லில் இந்தியாவில் உள்ள பவுலிங்கிற்கு கொஞ்சம் கூட சாதகமில்லாத ஆடுகளங்களில் அடித்து ஆடும் வீரர்களை நம்பி, ஐசிசி தொடர்களுக்கு அழைத்துச்சென்று வெளிநாட்டு ஆடுகளங்களில் தரமான ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக அவர்கள் சொதப்புவதால் தோற்று வெளியேறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது இந்திய அணி.

ஐபிஎல் இந்திய அணி தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் பலமான நல்ல பேலன்ஸான அணியை தேர்வு செய்யாமல் சில மோசமான தேர்வுகள் செய்யப்படுகின்றன. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios