Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் அவரு ஆடியே தீரணும்..! ஓய்வுபெற்ற வீரரை பாக்., அணியில் சேர்க்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியில், அண்மையில் ஓய்வு அறிவித்த முகமது ஆமீரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.
 

wasim akram opines retired mohammad amir should play in t20 world cup for pakistan
Author
Pakistan, First Published May 24, 2021, 5:14 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்துள்ளனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், சமி, ஜுனைத் கான் என பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட சிறந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமீர். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான ஆமீர், 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வுபெற்றார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(டி20, ஒருநாள்) கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக ஆமீர் தெரிவித்தார். ஆனால் ஆமீர் சுயநலவாதி என்ற விமர்சனம் எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஆமீருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்காமல் ஒதுக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

wasim akram opines retired mohammad amir should play in t20 world cup for pakistan

இதையடுத்து உடனடியாக அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் முகமது ஆமீர். மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீர், 29 வயதிலேயே ஓய்வு அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. இப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகம் நீடிக்கும் வரை தனது ஓய்வுமுடிவை வாபஸ் பெற வாய்ப்பே இல்லை இ என்று ஆமீர் தெரிவித்துவிட்டார்.

இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீரை பாகிஸ்தான் அணியில் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரும் பாக்., அணியின் முன்னாள் கேப்டனுமான  வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், எனக்கு வியப்பாக உள்ளது. அமீர் மாதிரியான அனுபவம் வாய்ந்த, டி20 கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த பவுலர் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் ஆடவேண்டும். வேறு யாருமே ஒரு ஃபார்மட்டில் விலகிவிட்டு விரும்பிய ஃபார்மட் கேம்களில் ஆடியதில்லையா? ஆமீர் அவர் சில ஃபார்மட்டுகளில் மட்டும் ஆட விரும்பினால் அந்த ஃபார்மட்டுகளில் பாகிஸ்தானுக்காக ஆடவைக்கலாம். 

wasim akram opines retired mohammad amir should play in t20 world cup for pakistan

உலக கோப்பை தொடர்களில் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் கண்டிப்பாக அணியில் தேவை. இளம் பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்த அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலர்கள் தேவை. எனவே டி20 உலக கோப்பையில் முகமது ஆமீரை சேர்க்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios