ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் வஹாப் ரியாஸ் பந்தை எச்சில் தொட்டு தேய்த்ததையடுத்து அம்பயர்கள் பந்தை சானிடைசர் போட்டு சுத்தப்படுத்தினர்.

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 156 ரன்கள் அடித்தது. 157 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொரோனா நெறிமுறைகளின்படி, பந்தை எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கின்போது, 11வது ஓவரை வீசிய வஹாப் ரியாஸ், பழக்கதோஷத்தில் பந்தை எச்சிலை தொட்டு தேய்த்தார். அதைக்கண்ட அம்பயர் அலீம் தர் மற்றும் யாகூப் ஆகியோர் சானிடைசர்ஸ் வைப்பை கொண்டு பந்தை சுத்தப்படுத்தினர்.