Asianet News TamilAsianet News Tamil

நான் ஆடிய காலத்துல இவருதான் மிகப்பெரிய மேட்ச் வின்னர்.. முன்னாள் இந்திய வீரர் பகிரும் சுவாரஸ்யம்

2000 - 2010 வரையிலான காலக்கட்டம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே கூறலாம். கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்த காலக்கட்டத்தில் ஆடிய கிரிக்கெட்டும் அமைத்துக்கொடுத்த அடித்தளமும் தான் இன்று இந்திய அணி தலைசிறந்து விளங்க காரணம்.
 

vvs laxman reveals the player name who is the match winner of his era
Author
India, First Published Nov 18, 2019, 3:54 PM IST

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், லட்சுமணன், யுவராஜ் சிங், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத், ஜாகீர் கான் என மிகச்சிறந்த அணி அது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோலோச்சிய அந்த காலத்தில், அந்த அணிக்கு சவாலாக திகழ்ந்தது கங்குலி தலைமையிலான இந்த வீரர்களை கொண்ட இந்திய அணி தான். 

ராகுல் டிராவிட், சச்சின், சேவாக், கும்ப்ளே, லட்சுமணன் என ஒவ்வொருவருமே மேட்ச் வின்னர் தான். ஆனாலும் தான் ஆடிய காலத்தில் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் யார் என்பதை விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

vvs laxman reveals the player name who is the match winner of his era

அனில் கும்ப்ளே தான், தான் ஆடிய காலக்கட்டத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என லட்சுமணன் தெரிவித்துள்ளார். தான் சேர்ந்து ஆடிய வீரர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் கும்ப்ளே தான் என்று கூறிய லட்சுமணன், கும்ப்ளேவை எதிர்த்து ஆடிய ஓர் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். 

vvs laxman reveals the player name who is the match winner of his era

இதுகுறித்து பேசிய லட்சுமணன், நான் ஹைதராபாத் அணிக்காகவும் அண்டர் 19 அணியிலும் சிறப்பாக ஆடியதை அடுத்து, சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்தியா பி அணிக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் எனக்கு எதிரணியில் கும்ப்ளே ஆடினார். கும்ப்ளேவின் லெக் ஸ்பின்னை பேக் ஃபூட்டில் ஸ்கொயர் திசையில் அடித்து ஆடினேன். ஸ்கொயர் திசையில் சிறப்பாக ஒரு பந்தை ஆடினேன். அதற்கு அடுத்த பந்தை அதேபோல அடிக்க முயன்றேன். ஆனால் நான் பேட்டை கொண்டு செல்வதற்கு முன்பாக பந்து, எனது கால்காப்பில் பட்டது. நான் எல்பிடபிள்யூ ஆனேன். அந்த பந்தை வேகமாக வீசிவிட்டார் கும்ப்ளே என்று லட்சுமணன் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios