Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்துக்குத்தான் சாதகம்.. எதார்த்தத்தை ஓபனா பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது நியூசிலாந்துக்கு சாதகமான விஷயம் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

vvs laxman opines new zealand has advantage than india in icc world test championship final
Author
Chennai, First Published Jun 6, 2021, 6:52 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். மைக்கேல் வான், பாட் கம்மின்ஸ் ஆகியோர் இங்கிலாந்து கண்டிஷன் இந்தியாவை விட நியூசிலாந்துக்குத்தான் கூடுதல் சாதகமாக இருக்கும் என்றும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன், இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடும் 2 டெஸ்ட் போட்டிகள் அந்த அணிக்கு நல்ல மேட்ச் பிராக்டிஸாக அமையும் என்பதால், அந்த விஷயத்தில் இந்திய அணி பாதிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் அதெல்லாம் மேட்டரே இல்லை என்றும், இந்திய அணி டாப் டீம் என்றும் கவாஸ்கர் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்வதற்கு முன்பாக, அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது உண்மையாகவே நியூசிலாந்துக்கு பலனளிக்குமா என்பது குறித்து முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், வெளிநாடுகளில் ஆடும்போது பொதுவாகவே, மெயின் மேட்ச்சுக்கு முன்பாக ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடுவது கண்டிஷனை அறிந்துகொள்ள உதவும். அது பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும். எனவே அந்தவகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் இங்கிலாந்தில் நியூசிலாந்து அணி ஆடும் 2 டெஸ்ட் போட்டிகள் அந்த அணிக்கு சாதகமாக அமையும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios