வங்கதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது.

முதல் டி20 போட்டி வரும் 3ம் தேதி நடக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவிருப்பதால், அதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளுமே பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

வலுவான இந்திய அணியை வீழ்த்தி கூடுதல் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் பெறும் முனைப்பில் வங்கதேச அணியும் தொடர் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, வெற்றி நடையை தொடரும் முனைப்பிலும் உள்ளன. 

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும் அணியின் முக்கியமான வீரருமான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது. எனவே ஷகிப் அல் ஹசன் இல்லாத வங்கதேச அணி சற்று பலம் குறைந்தே காணப்படும். ஷகிப் அல் ஹசன் இருந்திருந்தால் இந்திய அணிக்கு கடும் சவால் அளித்திருக்கும் அந்த அணி. அப்போதும் கூட இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்வது கடினமான விஷயம். ஆனால் கடும் சவால் அளித்திருக்கும். ஆனால் ஷகிப் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு.

ஆனாலும் இந்திய அணியை அந்த அணியால் வீழ்த்த முடியும் என விவிஎஸ் லட்சுமணன் நம்புகிறார். இந்த தொடர் குறித்து பேசியுள்ள லட்சுமணன், வங்கதேச அணியில் பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளது. அதனால் சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த வங்கதேச அணிக்கு இதுதான் செம சான்ஸ். ஆனால் அந்த அணி முஸ்தாஃபிசுர் ரஹ்மானை மட்டுமே பவுலிங்கில் அதிகமாக சார்ந்திருப்பதால், அவர் மீதான அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் யூனிட் நன்றாக இருக்கிறது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அனுபவமற்றதாக உள்ளது. 

இந்திய அணியில் விராட் கோலி இல்லை. எனவே மிடில் ஆர்டர் அனுபவமற்றதாக உள்ளது. அதை பயன்படுத்தி முஸ்தாஃபிசுர் புதிய பந்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியை வங்கதேச அணி வீழ்த்துவது கடினம் என்றாலும், இருக்கும் வாய்ப்புகளை லட்சுமணன் தெரிவித்துள்ளார். வங்கதேச அணி என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.