இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆடுகிறது. 

இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ராகுல் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

முதல் டி20 போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியில் ஆடும் லெவன் குறித்த தனது கருத்தை லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய லட்சுமணன், தவான் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பது அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்க்கும். உலக கோப்பையில் நான்காம் வரிசையில் நன்றாக ஆடிய ராகுல், மீண்டும் அந்த வரிசையில் ஆடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன். 

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் அணியில் இடம்பிடித்துவிட்டனர். எனினும் அவர்களுக்கான வாய்ப்புக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும். இந்த டி20 போட்டியில் ஒரு பவுலரை கூடுதலாக எடுக்க வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.