ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை பலமுறை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்வதில் மிகத்தீவிரமாக உள்ள நிலையில், இந்த சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று முன்னாள் வீரர் விஆர்வி.சிங் ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் பேசியுள்ளார்.

5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், கடந்த சீசனின் ஃபைனலிஸ்ட் டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என்று விஆர்வி.சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்பில்லை என்றே பலரும் கருதுகின்றனர்.