Asianet News TamilAsianet News Tamil

நாங்களும் ரிவியூ எடுக்குறதுல கெத்துதான்.. நிரூபித்து காட்டிய கோலி.. வீடியோ

இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இவரக்ளில் சேஸுக்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் அவுட் கொடுக்காததை கண்ட கேப்டன் கோலி, சற்றும் யோசிக்காமல் ரிவியூ எடுத்துவிட்டார். 
 

virat kohlis accuracy in drs decision lead bumrah to take his first hat trick in test cricket
Author
West Indies, First Published Sep 1, 2019, 4:47 PM IST

விராட் கோலி ரிவியூ எடுப்பதில் அவசரப்படுகிறார் அல்லது சரியாக கணிப்பதில்லை என்று அவர் மீது விமர்சனம் இருந்துவந்தது. தோனி விக்கெட் கீப்பர் என்பதால் அவரது கணிப்பு பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் ரிவியூ எடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு, சரியான வியூ விக்கெட் கீப்பருக்குத்தான் கிடைக்கும் என்பதால், அவர்தான் பெரும்பாலும் முடிவெடுப்பார். 

virat kohlis accuracy in drs decision lead bumrah to take his first hat trick in test cricket

தோனியின் முடிவு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். ஏதாவது ஒன்றிரண்டு முறை மிஸ்ஸாகும். ஆனால் தோனி இல்லாத நேரங்களில் இந்திய அணி ரிவியூவை வீணடித்திருக்கிறது. ரிஷப் பண்ட் இளம் விக்கெட் கீப்பர் என்பதால் அவர் அவசரப்பட்டு ரிவியூ எடுக்க சொல்லிவிடுவார். கேப்டன் கோலி பெரும்பாலும் விக்கெட் கீப்பர் தோனியின் ஆலோசனையை கேட்டே பழகிவிட்டார் என்பதால், அதையே தான் ரிஷப் பண்ட்டிடமும் தொடர்ந்தார். ஆனால் ரிஷப் பண்ட் கணிப்பு சரியாக இருப்பதில்லை. 

virat kohlis accuracy in drs decision lead bumrah to take his first hat trick in test cricket

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி சற்றும் யோசிக்காமல் சரியாக கணித்து ஒரு ரிவியூவை எடுத்தார். அந்த ரிவியூவால் தான் பும்ராவின் ஹாட்ரிக் விக்கெட் சாத்தியமானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் அடிக்க, இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

virat kohlis accuracy in drs decision lead bumrah to take his first hat trick in test cricket

இந்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட் பும்ரா போட்டது. அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இவரக்ளில் சேஸுக்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் அவுட் கொடுக்காததை கண்ட கேப்டன் கோலி, சற்றும் யோசிக்காமல் ரிவியூ எடுத்துவிட்டார். 

virat kohlis accuracy in drs decision lead bumrah to take his first hat trick in test cricket

பும்ராவின் கருத்தையோ விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கருத்தையோ கேட்கவெல்லாம் இல்லை. அவருக்கு அது அவுட் என்பது உறுதியாக தெரிந்தது. எனவே அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றதும், ரிவியூ எடுப்பதற்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆவதற்கு முன்னதாகவே எடுத்துவிட்டார். அவ்வளவு உறுதியாக அது அவுட் என நம்பினார் கோலி. அந்த பந்து லெக் ஸ்டம்பை அடித்தது. எனவே ரிவியூவில் இந்தியாவிற்கு சாதகமாக முடிவு வந்தது. சேஸ் நடையை கட்டினார். பும்ரா ஹாட்ரிக் வீழ்த்தினார். அந்த வீடியோ இதோ.. 

Follow Us:
Download App:
  • android
  • ios