5.9 அடி உயரம், 35 கிலோ எடையில் விராட் கோலிக்கு மெழுகு சிலை, ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, 18 ஆம் தேதி நிறுவ திட்டம்!

ஜெய்பூரில் மெழுகு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி விராட் கோலிக்கு மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது.

Virat Kohli Wax Statue will be Unveiled at The Nahargarh Jaipur Wax Museum on 18th April World Heritage Day rsk

பொதுவாகவே கிரிக்கெட் மற்றும் சினிமாவை பொறுத்த வரையில் ரசிகர்களுக்கு பிடித்தவர்களாக இருந்துவிட்டாலே அவர்களை கொண்டாடி விடுவார்கள். மேலும், அவர்கள் மீதான அன்பை வெளிக்காட்ட அவர்களுக்கு கோயில் கட்டுவது, சிலை வடிக்கவும் செய்வார்கள். அப்படி கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலிக்கு பல நாடுகளில் மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுக்கு அணியில் இடம் பெற்று விராட் கோலி விளையாடி வருகிறார். இதுவரையில் ஆர்சிபி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு இன்னும் 8 போட்டிகள் எஞ்சிய நிலையில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இந்த 8 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

இல்லையென்றால், இந்த முறையும் ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலை உண்டாகும். இந்த நிலையில், தான் ஜெய்பூரில் விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. கிரிக்கெட் நட்சத்திரத்தை போற்றும் ரசிகர்கள், இளைஞர்கள் குறிப்பாக குழந்தைகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது என்று நஹர்கர் ஜெய்ப்பூர் மெழுகு அருங்காட்சியகத்தின் நிறுவனரும், இயக்குநருமான அனுப் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறிருப்பதாவது: கடந்த ஆண்டு விராட் கோலியின் சிலையை உருவாக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளிடமிருந்து கோரிக்கை எழுந்தது. குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் விராட் கோலி மீது தீவிரமாக இருக்கின்றனர்.

உலக கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையை எட்டிய நிலையில், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோருக்கு பிறகு விராட் கோலிக்கு மெழுகு சிலை உருவாக்க முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார். கைவினை கலைஞர்களான கணேஷ் மற்றும் லட்சுமி இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக நுணுக்கமாக விராட் கோலியின் மெழுகு சிலையை வடிவமைத்திருக்கின்றனர்.

விராட் கோலியின் மெழுகு சிலையானது 5.9 அடி உயரமும், 35 கிலோ எடையும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெழுகு சிலையில் விராட் கோலியின் பேட்டும் இடம் பெற்றுள்ளது. மெழுகு சிலை, அணியும் உடையை பாலிவுட் டிசைனர் போத் சிங் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தின் மதிப்புமிக்க சேகரிப்புகளில் விராட் கோலியின் மெழுகு சிலையானது 44ஆவது கூடுதல் அம்சமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெழுகு சிலையானது உலக பாரம்பரிய தினமான ஏப்ரல் 18 ஆம் தேதி ஜெய்பூர் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்கு முன்னதாக விராட் கோலியின் மெழுகு சிலை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

 

VIRAT KOHLI'S STATUE AT JAIPUR WAX MUSEUM...!!!! 🐐

- The statue will be installed on April 18th, the face of cricket. [ETV Bharat]. pic.twitter.com/5z6aFrVw3b

— Johns. (@CricCrazyJohns) April 13, 2024
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios