Asianet News TamilAsianet News Tamil

எல்லாமே தப்பு தப்பா பண்றீங்க; நீங்க இங்க வாங்க.. நான் அம்பயரிங் பண்றேன்! அம்பயரை செமயா வச்சு செஞ்ச Virat Kohli

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அம்பயர்களின் தவறான முடிவுகளால் அதிருப்தியடைந்த விராட் கோலி, அம்பயரை நக்கலாக விளாசிய சம்பவம் வைரலாகிவருகிறது.
 

virat kohli takes a dig at umpire in second test against new zealand
Author
Mumbai, First Published Dec 6, 2021, 5:11 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி மயன்க் அகர்வாலின் அபார சதத்தின் (150) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸின் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3வது பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் படேல்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வெறும் 62 ரன்களுக்கு சுருண்டது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்து, 540 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி வெறும் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரை வென்றது இந்திய அணி.

2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலிக்கு தேர்டு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்தார். விராட் கோலியின் பேட்டில் பட்டு பின்னர் கால்காப்பில் பட்டது பந்து. ஆனால், கள நடுவர் தவறுதலாக அவுட் கொடுக்க, அதை கோலி ரிவியூ செய்தபோதிலும், தேர்டு அம்பயரும் அதற்கு அவுட் கொடுத்தது விராட் கோலியை மட்டுமல்லாது அனைவரையுமே அதிருப்தியடைய செய்தது. கோலி பவுண்டரி லைனை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் அதிருப்தியை தெரிவித்தனர்.

அம்பயர்கள் தவறான முடிவுகள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் படுமோசமான முடிவுகள் எடுக்கும்போதுதான், அவை வீரர்களை அதிருப்தியடைய செய்கின்றன. ஏற்கனவே தனக்கு தவறாக அவுட் கொடுத்த கடுப்பில் இருந்தார் விராட் கோலி. அப்படியிருக்கையில், நியூசிலாந்தின் 2வது இன்னிங்ஸில் அக்ஸர் படேல் வீசிய பந்து ரோஸ் டெய்லரின் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் சஹாவும் தவறவிட்டதால் பவுண்டரிக்கு சென்றது. அந்த பந்து டெய்லரின் பேட்டில் படவேயில்லை. ஆனாலும் அதற்கு அம்பயர் பவுண்டரி கொடுத்தார். இதையடுத்து கடும் அதிருப்தியடைந்த விராட் கோலி, என்ன பண்றீங்க நீங்க..? நீங்க(அம்பயரை) வேண்டுமானால் இங்கே வாங்க.. நான் அங்கே வருகிறேன் (அம்பயரிங் செய்ய) என்றார் கோலி. விராட் கோலி கூறியது சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios