ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த அரைசதத்தின் மூலம் 2 சாதனைகளை படைத்துள்ளார் விராட் கோலி.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக பல இன்னல்களை சந்தித்துவந்த நிலையில், ஆசிய கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இதையும் படிங்க - இதுதான் நீ பேட்டிங் ஆடுற லெட்சணமா..? டிரெஸிங் ரூமில் ரிஷப் பண்ட்டை விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா.. வைரல் வீடியோ
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 2 அரைசதங்கள் அடித்துள்ளார். ஹாங்காங்கிற்கு எதிராக 44 பந்தில் 59 ரன்களை குவித்த விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 44 பந்தில் 60 ரன்கள் அடித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு இது 32வது அரைசதம் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. இந்த பட்டியலில் 31 சதங்களுடன் ரோஹித் சர்மா 2ம் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்
மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் 4வது அரைசதம் இது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக டி20யில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கெவின் பீட்டர்சன், மார்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ஆரோன் ஃபின்ச் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் விராட் கோலி.
