Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார் கோலி! 3 ஆண்டுக்கு பிறகு முதல் சதம்.. ஆஃப்கானுக்கு கடின இலக்கு

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி20 கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலி, 3 ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்தார். கோலியின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்த இந்திய அணி, 213 ரன்கள் என்ற கடின இலக்கை ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

virat kohli scores first century in t20i and india set 213 runs as target for afghanistan in asia cup 2022 super 4 match
Author
First Published Sep 8, 2022, 9:08 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் ஏற்கனவே இந்த தொடரை விட்டு வெளியேறிவிட்ட இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். இந்திய அணியில் ரோஹித், ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அக்ஸர் படேல் ஆகியோர் ஆடுகின்றனர்.

இதையும் படிங்க - ஹர்பஜன், உங்களுக்கு அவங்க 2 பேரையும் எடுக்கலைங்குறது பிரச்னையா? இல்ல அஷ்வினை எடுத்தது பிரச்னையா?

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங். 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி (கேப்டன்), கரிம் ஜனத், ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், ஃபரீத் அகமது, ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். ராகுலும் கோலியும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 119 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ராகுல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய விராட் கோலி டெத் ஓவரில் பவுண்டரிகளாக விளாசி, டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுதான் விராட் கோலியின் முதல் சதம். 

கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, சுமார் 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்த நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். விராட் கோலி 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கு இன்று அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க - பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மிட்செல் ஸ்டார்க்!2வது ODIயிலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

61 பந்தில் 122 ரன்களை குவித்த விராட் கோலி, இந்திய அணி 20 ஓவரில் 212 ரன்களை குவிக்க உதவினார். ஆஃப்கானிஸ்தானுக்கு 213 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios