அடுத்த தலைமுறையை வழிநடத்துங்கள்: சதம் அடித்த சுப்மன் கில்லை பாராட்டி தள்ளிய விராட் கோலி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் சுப்மன் கில் சதமடித்ததைத் தொடர்ந்து விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் அணியில் சஹா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஷனாகா, ரஷீத் கான், நூர் அகமது என்று அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக சுப்மன் கில் தன் பங்கிற்கு ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து, இந்த சீசனில் சதமடித்த 6ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 58 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகள் உள்பட 101 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஹென்றிச் கிளாசென் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர்குமார் 27 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் சதமடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில்லிற்கு, ஆர்சிபி வீரர் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். திறமை உள்ளது, கில் இருக்கிறார். சென்று அடுத்த தலைமுறையை வழிநடத்துங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?