லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது லீக் போட்டியில் விளையாடுவதன் மூலமாக விராட் கோலி தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடக்கும் 15ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த நிலையில் தான் இன்று நடக்கும் 15ஆவது லீக் போட்டியின் மூலமாக விராட் கோலி தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார். பெங்களூரு மைதானத்தில் மட்டும் விராட் கோலி டி20 போட்டியில் 3276 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடக்க இன்னும் 56 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் அந்த இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 6754 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் உள்ளார்.

Scroll to load tweet…