Virat Kohli: அடிக்கடி வீட்டுக்கு போகும் விராட் கோலி – முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாடமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் மூலமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்தார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் ஆர்வமாக விளையாடி வந்தார். வரும் ஜூன் 1ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இதற்கு தயாராகும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர். எனினும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
England Lions vs India A: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இந்த நிலையில் தான் இன்று இரவு மொகாலியில் நடக்கும் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது: தனிப்பட்ட சொந்த காரணங்களால் விராட் கோலி இந்திய அணியுடன் மொகாலிக்கு பயணம் செய்யவில்லை. பயிற்சி போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார்.
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இடது மற்றும் வலது காம்பினேஷன் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடந்தாலும் கவலையில்லை – இந்தியாவில் தான் ஐபிஎல், எந்த மாற்றமும் இல்லை – பிசிசிஐ திட்டவட்டம்!
இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக விராட் கோலி தனது குடும்பத்தினரை சந்திக்க சென்றார். இதே போன்று தற்போது டி20 முதல் போட்டிக்கு முன்னதாக குடும்பத்தினரை சந்திக்க சென்றுள்ளார். இப்படி, போட்டியில் பங்கேற்காமல் அடிக்கடி வீட்டிற்கு செல்வதை விராட் கோலி தொடர்ந்து செய்வது வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிய போது இன்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!