Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC அவங்க 2 பேரும் கில்லிங்க.. மாற்றத்துக்குலாம் அவசியமே இல்ல.. பசங்க மிரட்டிருவாங்க..! கெத்தா பேசிய கோலி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து இருந்த ஒரு கருத்துக்கு டாஸ் போடும்போது கேப்டன் கோலி விளக்கமளித்தார்.
 

virat kohli justifies team india selection for icc world test championship final
Author
Southampton, First Published Jun 19, 2021, 4:17 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நேற்று தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இன்று போட்டி தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்து கண்டிஷன் பொதுவாகவே ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும். அதிலும் மழை பெய்து வானிலை மந்தமாக இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அதனால் கண்டிஷன் ஸ்பின்னிற்கு பெரிதாக ஒத்துழைக்காது. அதனால் நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின்னரை கூட எடுக்காமல், முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி நேற்று முன் தினமே அறிவிக்கப்பட்டுவிட்டது. கண்டிஷனுக்கு ஏற்ப இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று பேசப்பட்டது. கண்டிஷன் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்காது என்பதால், ஜடேஜாவிற்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரி சேர்க்கப்படலாம் என்று பேசப்பட்டது. 

இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், டாஸ் போடுவதற்கு முன்பாகக்கூட அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். இதே கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அறிவிக்கப்பட்ட அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் போடும்போது 2 ஸ்பின்னர்களுடன் ஆடுவது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 2 ஸ்பின்னர்களும்(அஷ்வின் - ஜடேஜா) எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள். ஈரப்பதம் இருந்தால், இருவருமே மிக துல்லியமாக வீசுவார்கள் என்று 2 ஸ்பின்னர்களை எடுத்ததை நியாயப்படுத்தினார் கேப்டன் கோலி.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios