சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்துவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனையும் அனைத்து ஷாட்டுகளையும் ஆடும் திறமையையும் வளர்த்துக்கொண்டு சிறந்து விளங்குகிறார். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் முற்றிலும் வேறானது. அவர் மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் அல்ல. முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். 

Also Read - அவங்க 2 பேருமே ஆடுவாங்க.. தன்னோட இடத்தை தாரைவார்த்த கேப்டன் கோலி.. இந்திய ஒருநாள் அணியில் செம சர்ப்ரைஸ்

இருவரும் முற்றிலும் வெவ்வேறான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்களாக இருந்தாலும், சமகால கிரிக்கெட்டில் இருவருமே ரன்களை குவித்துவருகின்றனர்.

Also Read - இடத்தையும் தேதியையும் மட்டும் சொல்லுங்கடா.. நாங்க ரெடி.. ஆஸ்திரேலிய கேப்டனின் சவாலை கெத்தா ஏற்ற கேப்டன் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடேவில் நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி - ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் என்று கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலளித்த கம்பீர், வெள்ளை பந்து(ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட பன்மடங்கு சிறந்தவர் விராட் கோலி. கோலியுடன் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கோலியுடன் நான் ஸ்மித்தை ஒப்பிடவே மாட்டேன். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஸ்மித் எந்த வரிசையில் பேட்டிங் ஆடுகிறார் என்பதை பார்க்கத்தான் ஆவலாக உள்ளேன். ஸ்மித்தே மூன்றாம் வரிசையில் இறங்குகிறாரா அல்லது லபுஷேன் மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டு, ஸ்மித் நான்காம் வரிசையில் இறங்குவாரா என்பதுதான் எனது எதிர்பார்ப்பு என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.