இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, இதற்கு முன் செய்யப்பட்ட பல பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து மூன்றாமிடத்தில் இருக்கிறார். இன்னும் 2 சதங்கள் அடித்தால், ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துவிடுவார். 

இவ்வாறு கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துவரும் கோலி, இன்ஸ்டாகிராமிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். சமூக வலைதளங்களான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி ஆக்டிவாக செயல்படுபவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில், முக்கியமான நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை உடனுக்குடன் பதிவேற்றிவிடுவார் கோலி.

Also Read - ஈகோவுக்குலாம் இங்க இடமே கிடையாது.. டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ்

இந்நிலையில், கோலியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை எட்டியுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயகளை பெற்ற டாப் இந்தியர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 49.9 மில்லியன் ஃபாலோயர்களுடன் பிரியங்கா சோப்ரா இரண்டாமிடத்திலும் 44.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் தீபிகா படுகோனே மூன்றாமிடத்திலும் உள்ளனர்.