Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் எல்லாருக்கும் நடக்குறதுதான்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கோலி ஆதரவு

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் எளிய கேட்ச்சை கோட்டைவிட்டு வசைகளுக்கு உள்ளான அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான விராட் கோலி பேசியுள்ளார்.
 

virat kohli backs arshdeep singh after he dropped sitter against pakistan in asia cup 2022 super 4 match
Author
First Published Sep 5, 2022, 4:25 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அரைசதம்(60) மற்றும் ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி அருமையான கேமியோ ரோல் பிளே செய்தார். 20 பந்தில் 42 ரன்களை விளாசிய நவாஸின் பேட்டிங் தான், பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

அதன்பின்னர் ஆசிஃப்  அலியும், குஷ்தில் ஷாவும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பல சம்பவங்கள் பாதகமாக அமைந்தன. சாஹல் ரன்களை வாரி வழங்கியது, 18வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டது, 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்களை வழங்கியது என பவுலிங், ஃபீல்டிங்கில் பல சொதப்பல். பேட்டிங்கிலும் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் சோபிக்காதது பின்னடைவு.

இந்திய அணி செய்த தவறுகளில் பெரும் தவறு, அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை கோட்டை விட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரின் 3வது பந்தில் ஆசிஃப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங். ஷார்ட் தேர்டு மேன் திசையில் மிகவும் எளிமையான அந்த கேட்ச்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். 

இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை விளாசினர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.

அர்ஷ்தீப் சிங் கோட்டை விட்டது கேட்ச்சை அல்ல; மேட்ச்சை.. அந்த கேட்ச் தான் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது. எளிமையான அந்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் தவறவிட்டதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே கடும் கோபமடைந்தார். அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது. 

அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் என்று கூறி பிரிவினையை தூண்டும் விதத்தில் பாகிஸ்தானியர்கள் தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க - இதுதான் நீ பேட்டிங் ஆடுற லெட்சணமா..? டிரெஸிங் ரூமில் ரிஷப் பண்ட்டை விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா.. வைரல் வீடியோ

இந்நிலையில், அர்ஷ்தீப் கேட்ச்சை தவறவிட்டது குறித்து பேசிய விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக நான் எனது முதல் போட்டியில் ஆடியபோது மோசமான ஒரு ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தேன். எனவே எந்த வீரருக்கும் கெரியரின் ஆரம்பக்கட்டத்தில், அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்  அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அணிச்சூழல் சிறப்பாக உள்ளது. அனைத்து கிரெடிட்டும், கேப்டனையும் அணி நிர்வாகத்தையுமே சாரும். எனவே அர்ஷ்தீப்பிற்கு ஆதரவாக அணி இருக்கிறது. அவர் இந்த அனுபவத்திலிருந்து அழுத்தமான சூழலை எதிர்கொள்ள கற்றுக்கொள்வார் என்று கோலி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios