Kohli vs Bavuma: கோலி அடித்த த்ரோ.. பவுமா அதிருப்தி..! கோலி - பவுமா வாக்குவாதம்.. வைரல் வீடியோ
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியும் டெம்பா பவுமாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி பார்லில் நடந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டெம்பா பவுமா (110) மற்றும் வாண்டர் டசனின் (129*) அபாரமான சதத்தால் 50 ஓவரில் 296 ரன்களை குவித்தது.
297 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 265 ரன்கள் மட்டுமே அடித்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2017ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஒருநாள் போட்டியில் 2017ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஒரு கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக ஆடினார். ஆனாலும் அவர் தான் ஃப்ரேமில் இருந்தார். கோலியை ஆட்டத்தில் இருந்து எந்த சூழலிலும் தவிர்த்துவிடவேமுடியாது.
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் ஆடியபோது இன்னிங்ஸின் 36வது ஓவரில் டெம்பா பவுமா அடித்த பந்தை ஷார்ட் கவர் திசையில் நின்ற கோலி பிடித்தார். அந்த பந்தை பிடித்து வேகமாக த்ரோ அடித்தார். அந்த த்ரோ பவுமாவுக்கு நேராக சென்றது. ஆனால் பவுமா குனிந்து எஸ்கேப் ஆனார். கோலியின் த்ரோவால் அதிருப்தியடைந்த பவுமா, கோலியிடம் அதிருப்தியை வெளிப்படுத்த, வழக்கம்போகவே கோலி மூறிக்கொண்டு சென்று பதிலளிக்க, பவுமா அடங்கினார். கோலி - பவுமா இடையேயான வாக்குவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.