இந்திய அணியின் நடப்பு நியூசிலாந்து சுற்றுப்பயணம், இந்திய அணிக்கு படுமோசமானதாக அமைந்துவிட்டது. டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது.

ஒருநாள் தொடரில் படுமோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் அதைவிட மோசமாக தோற்றது. முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை கடக்காத இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்விக்கு அருகில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் நியூசிலாந்தை அதைவிட குறைந்த ரன்களுக்கு சுருட்டியது. நியூசிலாந்தை 235 ரன்களுக்கு சுருட்டி, 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த தொடரில் இந்திய அணி ஆக்ரோஷமாகவே ஆடவில்லை. பொதுவாக கோலி ஆக்ரோஷமான கேப்டன். அதனால் அவரது ஆக்ரோஷமும் ஆவேசமும் அணி முழுவதும் நிறைந்திருக்கும். மற்ற வீரர்களிடத்திலும் அதன் தாக்கத்தை காணமுடியும். ஆனால் நியூசிலாந்து தொடரை கேப்டன் கோலி அப்படி அணுகவில்லை. மென்மையாக கையாண்டார். அவரது போட்டி குணத்தின் வெளிப்பாடாகத்தான் அவரது ஆக்ரோஷம் இருக்கும். ஆனால் இந்த தொடரில் அதை சற்றும் காண முடியவில்லை. இந்நிலையில், கோலி நியூசிலாந்தை மென்மையாக அணுகுவதும் அவரது இயல்பான ஆக்ரோஷத்தை விட்டதும் கூட, அவர் சரியாக ஆடாததற்கும் அணியின் தொய்விற்கும் காரணமாக பேசப்பட்டது. 

Also Read - நியூசிலாந்தில் படுமோசமா அசிங்கப்பட்ட கோலி.. முன்னாள் ஜாம்பவான் சொன்ன அதிரடி காரணம்

இந்நிலையில், 2வது டெஸ்ட்டில் வில்லியம்சனின் விக்கெட்டை வெகுவாக கொண்டாடி தீர்த்தார் விராட் கோலி. பும்ராவின் பந்தில் வில்லியம்சன் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பழையபடி, மிகுந்த ஆக்ரோஷத்துடன் செமயாக கொண்டாடினார் விராட் கோலி. அந்த வீடியோ இதோ..