பாகிஸ்தானில் அல் வகீல் கிரிக்கெட் லீக் தொடரில் தொடரில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியின் கடைசி பந்தில் ஒரு அணி பவுண்டரியே அடிக்காமல் 5 ரன்கள் அடித்து வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
பாகிஸ்தானில் நடத்தப்படும் அல் வகீல் கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அந்த தொடரில் 20 ஓவரில் 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆட்டோமால் என்ற அணி என்ற 19.5 ஓவரில் 150 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
கடைசி பந்தில் ஆட்டோமால் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ரஹீல் மாஜே அந்த கடைசி பந்தை எதிர்கொண்டார். பவுலர் ஃபுல் லெந்த்தில் வீசிய அந்த பந்தை ரஹீல் லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடினர். அந்த பந்தை பிடித்த ஃபீல்டர் பந்தை கையில் எடுத்துக்கொண்டு பிட்ச் வரை ஓடிவந்தார். அந்த இடைவெளியில் பேட்ஸ்மேன்கள் அதை 3வது ரன்னாக மாற்ற முயன்று 3வது ரன் ஓடினர். 3வது ரன்னை ஓடி முடிக்காத நிலையில், பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓடிவந்த ஃபீல்டர், பேட்டிங் முனை ஸ்டம்ப்புக்கு அருகில் வந்து பந்தை த்ரோ அடிக்க அந்த பந்து விக்கெட் கீப்பரை தாண்டி ஓடியது. அதைப்பயன்படுத்தி மேலும் 2 ரன்களை பேட்ஸ்மேன்கள் ஓடி முடிக்க, ஆட்டோமால் அணி கடைசி பந்தில் 5 ரன் அடித்து வெற்றி பெற்றது.
சிக்ஸர் அடித்தாலோ, பவுலர் தவறு செய்தாலோ ஒழிய வெற்றி பெறமுடியாத போட்டியை, எதிரணி செய்த தவறால் ஒரு பந்தில் 5 ரன் அடித்து ஆட்டோமால் அணி வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு மோசமான, காமெடியான சம்பவம் நடந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
