விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் சிறந்த வீரர்கள் அணியில் இருந்தும்கூட, அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் ஐபிஎல் கோப்பைகளை வாங்கிக்குவித்துவரும் நிலையில், ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவருகிறது. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளை போல கோர் டீம் வலுவாக இல்லாததும், சிறந்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகளை அளிக்காததும், ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பதும்தான் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணம்.

ஆர்சிபி ரசிகர்களும், ஒவ்வொரு முறையும் “ஈ சாலா கப் நம்தே”(இந்த முறை கப் நமக்குத்தான்) என்று பேரார்வத்துடன் ஒவ்வொரு சீசனிலும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் நம்பிக்கை ஒவ்வொரு சீசனிலும் நிறைவேறாமல் போகிக்கொண்டேயிருக்கும் நிலையில், இப்போதெல்லாம் அது கிட்டத்தட்ட மூட நம்பிக்கையாகவே மாறிவிட்டது. அந்தளவிற்கு ரசிகர்களை காயவிட்டது ஆர்சிபி அணி.

ஐபிஎல் 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதன் லோகோவை மாற்றியுள்ளது. இந்நிலையில், இதைக்கண்ட ஆர்சிபி அணியின் முன்னாள் ஓனரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, விராட் அண்டர் 19 அணியிலிருந்து அப்படியே நேரடியாக ஆர்சிபிக்கு வந்தார். இப்போது இந்திய அணிக்கே கேப்டனாகி வழிநடத்தி கொண்டிருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரர். எனவே அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அனைத்தையும் அவரிடமே கொடுத்துவிடுங்கள். ஆர்சிபி ரசிகர்கள் நீண்ட காலமாக கோப்பைக்காக காத்திருக்கிறார்கள் என்று விஜய் மல்லையா அறிவுறுத்தியுள்ளார். 

அந்த அணியில் கோர் டீம் வலுவாக இல்லாததும் தவறான அணுகுமுறைகளும் மட்டுமே அந்த அணியின் தோல்விக்கு காரணமல்ல. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள், கேப்டன் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ஆர்சிபியில் இருப்பதாக விஜய் மல்லையா உணரவில்லை. அதனால்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.