Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC எந்தமாதிரியான பிட்ச்சா வேணாலும் இருந்துட்டு போகுது.. வெற்றி இந்தியாவுக்குத்தான் - வெங்கடேஷ் பிரசாத்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி தான் ஜெயிக்கும் என்று முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் முன்னாள் பவுலிங் பயிற்சியாளருமான வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

venkatesh prasad believes india will win in icc world test championship final
Author
Chennai, First Published Jun 14, 2021, 9:05 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுவதால் அந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களை கொண்ட மற்றும் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சமபலத்துடன் திகழும் அணிகள் ஆகும். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது என்றால் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லேதம், கான்வே, ஹென்ரி நிகோல்ஸ் என சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

venkatesh prasad believes india will win in icc world test championship final

இந்திய அணியில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோர் என்றால், நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன், இஷ் சோதி, ஃபெர்குசன் ஆகியோர் உள்ளனர்.  இப்படியாக இரு அணிகளும் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத், 2 சிறந்த அணிகள் ஃபைனலில் மோதுகின்றன. இந்திய அணியின் பென்ச் வலிமை அபாரமாக உள்ளது. பிட்ச் பேட்டிங் டிராக்காகவோ அல்லது பவுலிங் டிராக்காகவோ எதுவாக இருந்தாலும் சரி, இந்திய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். அதற்கு காரணம், இந்திய அணியின் பவுலிங் யூனிட் வலுவாக இருப்பதுதான். 1990-2000களில் 2 நல்ல ஃபாஸ்ட் பவுலர்கள் இருப்பார்கள். இந்திய அணிக்கு 3 அல்லது 4வது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனே இருக்காது. 

ஆனால் தற்போதைய இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. 2 தரமான ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். எப்போதுமே நமது அணியில் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கும் உள்ளது. நமது அணியில் பேட்டிங்கும் வலுவாக உள்ளது 350 ரன்களை அடிக்கக்கூடிய பேட்டிங் ஆர்டர் உள்ளது. எனவே எந்தவிதமான ஆடுகளமாக இருந்தாலும், இந்திய அணி வெற்றி பெறக்கூடிய அனைத்துவிதமான சாத்தியக்கூறுகளும் உள்ளன என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios