Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையும் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர்..?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் ஆகிய மூவரும் இந்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ராஜஸ்தான் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

van der dussen  might be join with rajasthan royals in ipl 2021
Author
Chennai, First Published Apr 23, 2021, 10:18 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறிவருகிறது. முதல் போட்டியில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான லிவிங்ஸ்டன், கொரோனா பாதுகாப்பு வளையத்தை சமாளிக்க முடியாமல் இந்த சீசனிலிருந்து விலகினார்.

கையில் ஏற்பட்ட காயத்தால், ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளில் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ச்சரும் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

ராஜஸ்தான் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், அடுத்தடுத்து 3 இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர்டசனை மாற்று வீரராக ராஜஸ்தான் அணி எடுக்கவுள்ளதாகவும், அவர் விரைவில் அணியுடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வாண்டர்டசன், அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்திருந்தார். 

பாகிஸ்தானுக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்துடன் 183 ரன்களையும், 2 டி20 போட்டிகளில் 86 ரன்களும் அடித்திருந்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios