இதுவரையில் குறைந்த வயதில் ரஞ்சி டிராபியில் விளையாடிய வீரர்களில் 13 வயது நிரம்பிய 9 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயின் மூலமாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் என்று சொல்லப்படும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 1934 – 35 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபி தொடர் நடத்தப்பட்டது. இதுவரையில், 88 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், மும்பை அணி 41 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. கர்நாடகா அணி 8 முறையும், டெல்லி அணி 7 முறையும் டிராபியை வென்றுள்ளன. தற்போது 89ஆவது ரஞ்சி டிராபி தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது வெளியீடு தெரியுமா?
இதில் 12 வயது நிரம்பிய பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகியுள்ளார். இன்று தொடங்கிய ரஞ்சி டிராபியில் பீகார் மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டியின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அவர், 12 வயதில் ரஞ்சி டிராபியில் அறிமுகமானாலும், அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிசிசிஐயின் பதிவுகள் அவருக்கு 12 வயது என்று கூறினாலும், கடந்த ஆண்டு அளித்த ஒரு நேர்காணலில், சூர்யவன்ஷியே 2023 நவம்பரில் 14 வயதை எட்டுவார் என்று பரிந்துரைத்தார். உண்மை வெளிவர சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அது ஒருமுறை மீண்டும் வயது மோசடி என்ற அச்சுறுத்தலை முன்வைத்தது.
கிழிஞ்சு போன தொப்பிய போட்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா கேப்டன்: ஏன் தெரியுமா?
சூர்யவன்ஷியின் உண்மையான வயது 12 என்றால், அவர் இன்றைய ரஞ்சி டிராபி தொடரின் மூலமாக இளம் வயதில் ரஞ்சி டிராபி விளையாடிய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் விளையாடிய 4ஆவது இளம் வீரராக இருப்ப்பார். 1942-43ல் தனது 12 வயது 73 நாட்களில் முதல்தர போட்டியில் அறிமுகமாகி ராஜ்புதானாவுக்காக விளையாடிய அலிமுதீனின் பெயரில் இந்த சாதனை தற்போது உள்ளது.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே….சின்ன வயசுல விளையாடிய ரிங்கா ரிங்கா ரோசஸ் - வைரலாகும் வீடியோ!
