Asianet News TamilAsianet News Tamil

முதல் சதத்தை இந்தியாவுக்கு எதிரா அடித்த உஸ்மான் கவாஜா!! வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

ஜடேஜா வீசிய 7வது ஓவரின் நான்காவதை பந்தை உஸ்மான் கவாஜா ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். அது நேராக பாயிண்ட் திசையில் நின்ற தவானிடம் சென்றது. ஈசியான அந்த கேட்ச்சை தவான் தவறவிட்டார். அந்த வாய்ப்பை உஸ்மான் கவாஜா நன்கு பயன்படுத்தி கொண்டார். 
 

usman khawaja hits maiden century against india in third odi
Author
Ranchi, First Published Mar 8, 2019, 4:30 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி குல்டர்நைலுக்கு பதிலாக ரிச்சர்ட்ஸ்னை சேர்த்து, ஒரேயொரு மாற்றத்துடன் ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா அருமையாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளனர். பும்ரா, ஷமி ஆகியோரின் பவுலிங்கை சமாளித்து ஆடி ரன்களை சேர்த்த ஃபின்ச்-உஸ்மான் ஜோடி, குல்தீப், கேதர், ஜடேஜா ஆகியோரின் ஸ்பின் பவுலிங்கையும் நன்றாக ஆடினர்.

ஜடேஜா வீசிய 7வது ஓவரின் நான்காவதை பந்தை உஸ்மான் கவாஜா ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். அது நேராக பாயிண்ட் திசையில் நின்ற தவானிடம் சென்றது. ஈசியான அந்த கேட்ச்சை தவான் தவறவிட்டார். அந்த வாய்ப்பை உஸ்மான் கவாஜா நன்கு பயன்படுத்தி கொண்டார். 

usman khawaja hits maiden century against india in third odi

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பிறகும் அடித்து ஆடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். சதத்தை நெருங்கிய ஆரோன் ஃபின்ச், 93 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆனால் சதமடித்த கவாஜா, சதத்தை பூர்த்தி செய்த மாத்திரத்திலேயே 104 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். சதத்திற்கு பிறகு பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை. உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தாலும் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். மேக்ஸ்வெல்லுடன் ஷான் மார்ஷும் சிறப்பாக ஆடினார். அந்த அணி, 40 ஓவரிலேயே 240 ரன்களை கடந்துவிட்டது. எனவே 300 ரன்களுக்கு மேல் அடிப்பது உறுதியாகிவிட்டது. அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து தோனியின் சமயோசித விக்கெட் கீப்பிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios