ஐபிஎல் 15வது சீசனின் அதிவேக பந்தை உம்ரான் மாலிக் வீசியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை அசால்ட்டாக செய்கிறார் உம்ரான் மாலிக்.

இந்த சீசனில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் இந்த சீசனின் அதிகபட்ச வேகமான பந்தை வீசியுள்ளார். தோனிக்கு 154 கிமீ வேகத்தில் யார்க்கர் வீசினார் உம்ரான் மாலிக். இதுதான் இந்த சீசனின் அதிகபட்ச வேகமான பந்து.

Scroll to load tweet…

லாக்கி ஃபெர்குசன் வீசிய 153.9 கிமீ வேகத்திலான பந்துதான் இந்த சீசனின் அதிவேகமான பந்தாக இருந்தது. அதைவிட அதிக வேகத்தில் 154 கிமீ வேகத்தில் வீசி முதலிடத்தை பிடித்துள்ளார் உம்ரான் மாலிக். இந்த பட்டியலில் 2ம் இடத்தில் ஃபெர்குசன் (153.9 கிமீ) இருக்கிறார். அதற்கடுத்த 3 இடங்களிலும் உம்ரான் மாலிக் (153.3, 153.1, 152.9) தான் இருக்கிறார்.

Scroll to load tweet…