Asianet News TamilAsianet News Tamil

கத்தி கூப்பாடு போட்ட ரஷீத் கான்.. கம்முனு நின்ன அம்பயர்.. அம்பயரோட புண்ணியத்தால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்

ஹாரிஸ், சர்ஃபராஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, கடைசியில் இமாத் வாசிம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடித்த இமாத் வாசிம் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். 
 

umpires wrong decision on imad wasim wicket turned the match in favour of pakistan
Author
England, First Published Jun 30, 2019, 11:59 AM IST

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அம்பயர் செய்த தவறு ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, அம்பயரின் தவறு, ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவமின்மையால் அந்த அணி செய்த தவறுகள் ஆகியவற்றால் கடைசி ஓவரில் ஒருவழியாக வெற்றி பெற்றது. 

umpires wrong decision on imad wasim wicket turned the match in favour of pakistan

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க விரர் ஃபகார் ஜமான் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்களை சேர்த்த பாபர் அசாம் மற்றும் முகமது ஹஃபீஸ் ஜோடியை பிரித்த முகமது நபி, இருவரையுமே வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

umpires wrong decision on imad wasim wicket turned the match in favour of pakistan

அதன்பின்னர் ஹாரிஸ், சர்ஃபராஸ் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, கடைசியில் இமாத் வாசிம் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடித்த இமாத் வாசிம் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். 

ஆட்டத்தையே ஆஃப்கானிஸ்தானிடமிருந்து பறித்த இமாத் வாசிம், ரஷீத் கான் வீசிய 37வது ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். ரஷீத் வீசிய 37வது ஓவரின் மூன்றாவது பந்தி இமாத் வாசிமின் கால்காப்பில் பட்டது. அதற்கு ரஷீத் கானும் ஆஃப்கான் வீரர்களும் மிகத்தீவிரமாக அம்பயரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். ஆஃப்கானிஸ்தானிடம் ரிவியூ இல்லாததால் ரிவியூவும் எடுக்க முடியவில்லை. ஆனால் ரீப்ளேவில் அது அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. அது அவுட்டுதான் என்பது ஆஃப்கானிஸ்தானுக்கு தெரிந்தும் அம்பயரின் தவறான தீர்ப்பாலும் ரிவியூ இல்லாததாலும் நிராயுதபாணியாக நின்றார். கடைசியில் அந்த விக்கெட்டிலிருந்து தப்பிய இமாத் வாசிம் தான் பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

umpires wrong decision on imad wasim wicket turned the match in favour of pakistan

அம்பயர் சரியாக அவுட் கொடுத்திருந்தால் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி இது. ஆனால் அவரது தவறான தீர்ப்பால் ஆஃப்கானிஸ்தான் வெற்றியை இழந்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios