ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 லீக் தொட ர் நடந்துவருகிறது. மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

மெல்போர்னில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. 156 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை 137 ரன்களுக்கு சுருட்டி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி.

இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, 9வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டெரும் பாய்ஸூம் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர். அப்போது, 17வது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை வெப்ஸ்டெர் எதிர்கொண்டார். ரஷீத் கான் வீசிய பந்து வெப்ஸ்டெரின் கால்காப்பில் பட்டது. அதற்கு ரஷீத் கான், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் அப்பீல் செய்ய, அவுட் கொடுப்பது போல் கையை தூக்கிய அம்பயர் க்ரேக் டேவிட்சன், அவுட் கொடுக்காமல் மூக்கை சொறிந்தார். 

ஆனால் அவர் அவுட் கொடுப்பது போலவே கையை தூக்கியதால், அவர் முழுமையாக கையை தூக்கும் வரை காத்திருக்காமல், கையை தூக்கியதுமே ரஷீத் கான், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்கள் விக்கெட்டை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். வீரர்கள் கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் அவர் அவுட் கொடுப்பது போலத்தான் கையை தூக்க ஆரம்பித்தார். ஆனால் வீரர்களை நோஸ்கட் செய்யும் விதமாக மூக்கை சொறிந்த அம்பயர் டேவிட்சன், பின்னர் பவுலிங் அணியிடம், அது அவுட் இல்லை எனவும், தான் மூக்கை சொறிவதற்காக கையை தூக்கியதாகவும் தெரிவித்தார். இதனால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் கேப்டன் கேமரூன் ஒயிட் உட்பட அனைத்து வீரர்களும் அதிருப்தியடைந்தனர். அந்த வீடியோ இதோ..