இந்தியா - இங்கிலாந்து மோதும் அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபைனலில் மோதுகின்றன.

ஆண்டிகுவாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதற்கு முன் 2000, 2008, 2012, 2018ம் ஆண்டுகளில் 4 முறை அண்டர் 19 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடுகிறது.

2020ம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் வங்கதேசத்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, இம்முறை கோப்பையை வெல்லும் தீவிரத்தில் ஆடுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர் 19 அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

இந்தியா அண்டர் 19 அணி:

அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷைக் ரஷீத், யஷ் துல் (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தினேஷ் பானா (விக்கெட் கீப்பர்), கௌஷல் டாம்பே, ராஜ் பாவா, விக்கி ஆஸ்ட்வால், ரவி குமார்.