ரோகித் 0, நமன் திர் 0, பிரேவிஸ் 0 - கோல்டன் டக்கில் காலி செய்து டிரெண்ட் போல்ட் புதிய சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் ரோகித் சர்மா, நமன் திர், டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை டிரெண்ட் போல்ட் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Trent Boult Take Rohit Sharma, Naman Dhir and Dewald Brewis wickets in Golden Duck during MI vs RR in 14th IPL 2024 at Wankhede Stadium rsk

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ராஜஸ்தான் அணியில் முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் முதல் 4 பந்துகள் பிடித்து இஷான் கிஷான் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து ரோகித் சர்மா பேட் செய்தார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டில் வெளியேறிய வீரர்களின் பட்டியலில் 17 முறை ஆட்டமிழந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்துள்ளார்.

 

 

ரோகித் சர்மா, 17ஆவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடும் 201ஆவது ஐபிஎல் போட்டியாகும். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆனவர்கள்:

17 – ரோகித் சர்மா (இன்றைய போட்டி)

17 – தினேஷ் கார்த்திக்

15 – கிளென் மேக்ஸ்வெல்

15 – பியூஷ் சாவ்லா

15 – மந்தீப் சிங்

15 – சுனில் நரைன்

முதல் ஓவரின் கடைசி பந்தில் நமன் திர்ரும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். மேலும், முதல் ஓவரிலேயே 2 விக்கெட் கைப்பற்றி டிரெண்ட் போல்ட் அசத்தியுள்ளார். இதையடுத்து மீண்டும் 3ஆவது ஓவரை வீச வந்த டிரெண்ட் போல்ட் 2ஆவது பந்தில் டெவால்ட் பிரேவிஸை கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் வரிசையாக கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதே போன்று, நந்த்ரே பர்கர், இஷான் கிஷான் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஓவரில் 80 இன்னிங்ஸில் 25 விக்கெட்டுகள் கைப்பற்றி போல்ட் போல்ட் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இதற்கு முன்னதாக புவனேஷ்வர் குமார் 116 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios