தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் ஃபாஸ்ட் பவுலர் சோனு யாதவ் ரூ.15.2 லட்சத்துக்கு விலைபோனார். ஆல்ரவுண்டர் சஞ்சய் யாதவை ரூ.17.6 லட்சம் என்ற உச்சபட்ச தொகைக்கு சேப்பாக் அணி வாங்கியது. இடது கை சீனியர் ஃபாஸ்ட் பவுலர் நடராஜனை ரூ.6.25 லட்சத்துக்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 7வது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 2 வீரர்களை தக்கவைத்தது. மற்ற அனைத்து வீரர்களும் ஏலம் விடப்படுகின்றனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது சீசனுக்கான ஏலம் மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணி வாங்கியது. ஃபாஸ்ட் பவுலர் சந்தீப் வாரியரை ரூ.8.25 லட்சம் என்ற பெரிய தொகைக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி வாங்கியது.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை ரூ.6.75 லட்சத்திற்கு மதுரை பாந்தர்ஸ் அணியும், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை அதே தொகைக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் வாங்கின.

தமிழ்நாட்டிலிருந்து சென்று இந்திய அணியில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனம் ஈர்த்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜனை ரூ.6.25 லட்சத்திற்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வாங்கியது. 

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

ஃபாஸ்ட் பவுலர் சோனு யாதவை ரூ.15.2 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி வாங்கிய நிலையில், சஞ்சய் யாதவை அதிகபட்சமாக ரூ.17.6 லட்சம் கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வாங்கியது. இந்த ஏலத்தில் இதுவரை அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சஞ்சய் யாதவ் படைத்தார். இந்த ஏலத்தில் டாப் 2 தொகைக்கு எடுக்கப்பட்ட சஞ்சய் யாதவ் மற்றும் சோனு யாதவ் ஆகிய இருவரும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.