Asianet News TamilAsianet News Tamil

TNPL 2022: தமிழ்நாடு பிரீமியர் லீக் 6வது சீசனின் போட்டி அட்டவணை மற்றும் முக்கியமான தகவல்கள்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகள், போட்டி அட்டவணை உட்பட முக்கியமான விவரங்களை பார்ப்போம்.
 

tnpl 2022 schedule time table teams and live telecast details
Author
Chennai, First Published Jun 23, 2022, 11:51 PM IST

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள கிரிக்கெட் திறமைகளை கண்டறியும் விதமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர். 

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் இன்று தொடங்கியது. 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படவில்லை. அதனால் 2016, 2017, 2018, 2019, 2021 என 2020ம் ஆண்டை மட்டும் விடுத்து, 5 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 6வது சீசன் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகள்:

1. சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

2. நெல்லை ராயல் கிங்ஸ்

3. திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ்

4. மதுரை பாந்தர்ஸ்

5. சேலம் ஸ்பார்ட்டன்ஸ்

6. லைகா கோவை கிங்ஸ்

7. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்

8. காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடுகின்றன.

6வது சீசன் ஜூன் 23ம் தேதி தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. நெல்லை அணி நிர்ணயித்த 185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக் அணி 184 ரன்கள் அடித்ததால் போட்டி டை ஆனது. சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - ரூட் நிற்க வச்சா மட்டும் பேட் தனியா நிற்குது.. நாம வச்சா நிற்க மாட்டேங்குது! கோலியின் முரட்டு முயற்சி.. வீடியோ

ஜூன் 23 முதல் ஜூலை 31ம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது. ஜூலை 31ம் தேதி இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. முழு போட்டி அட்டவணையை பார்ப்போம். மொத்தம் 32 போட்டிகள். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். எனவே ஒவ்வொரு அணிக்கும் தலா 7 லீக் போட்டிகள். 

tnpl 2022 schedule time table teams and live telecast details

tnpl 2022 schedule time table teams and live telecast details

இரவு தொடங்கும் போட்டிகள் அனைத்தும் 7.15 மணிக்கும், பிற்பகல் தொடங்கி நடக்கும் போட்டிகள் 3.15 மணிக்கும் தொடங்கும். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios